இந்தியாவில் ஒரு வேலைக்கு 75 பேர் போட்டி – நேஷனல் கேரியர் சர்வீஸ் அறிக்கை!

0
இந்தியாவில் ஒரு வேலைக்கு 75 பேர் போட்டி - நேஷனல் கேரியர் சர்வீஸ் அறிக்கை!
இந்தியாவில் ஒரு வேலைக்கு 75 பேர் போட்டி - நேஷனல் கேரியர் சர்வீஸ் அறிக்கை!
இந்தியாவில் ஒரு வேலைக்கு 75 பேர் போட்டி – நேஷனல் கேரியர் சர்வீஸ் அறிக்கை!

நேஷனல் கேரியர் சர்வீஸ் நிறுவனம் வேலைவாய்ப்புகளை பற்றிய ஆய்வினை மேற்கொண்டு, தன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு பணி பதவிக்கு 75 பேர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு ஆய்வு:

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நாடு முழுவதும் விரைவான மற்றும் திறமையான தொழில் தொடர்பான சேவைகளை நிறுவுவதற்காக 2015 ஆம் ஆண்டு தேசிய தொழில் சேவை இணையதளம் (நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்டல்) தொடங்கப்பட்டது. வேலை தேடுபவர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் போர்ட்டலில் தங்களை பதிவு செய்து, வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்டல் செப்டம்பரில் புதிய வேலை தேடுபவர்களின் அதிக அளவிற்க்கான பதிவினை பெற்றுள்ளது. அதவாது 15 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலை தேடுபவர்கள் போர்ட்டலில் தங்களைப் பதிவு செய்துள்ளதாக செப்டம்பர் 2021 இல் தொழிலாளர் அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் – ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

நிறுவனத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர் 19 வரை பதிவுசெய்யப்பட்ட வேலையில்லாத வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 95.39 லட்சமாக உள்ளது. தற்போது கிட்டத்தட்ட 1.10 கோடி வேலை தேடுபவர்கள் 1,46,293 வேலைகளுக்கு தங்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்த வேலை தேடுபவர்களில் 67 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 34 லட்சம் பேர் பெண்கள் ஆவர். ஒவ்வொரு பணிக்கும் சராசரியாக 75க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வேலை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1,70,056 நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர்.

அதில், மேற்கு வங்கம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை வேலை தேடுபவர்கள் பதிவு செய்த முதல் மூன்று மாநிலங்களில் உள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 24.45 லட்சம் பேரும், பீகாரில் 12.30 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 11.06 லட்சம் பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேரும், ஜார்க்கண்டில் 4.57 லட்சம் பேரும், டெல்லியில் 1.18 லட்சம் பேரும், ஹரியானாவில் 88,000 பேரும், உத்தரகாண்டில் 65,000 பேரும் வேலைவாய்ப்பிற்காக தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 43% பேருக்கு வேலை – ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனம் அறிக்கை!

நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்டலில் தங்களைப் பதிவு செய்து கொண்ட மாநில வாரியான வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மேற்கு வங்காளம்: 2,445,250
  • பீகார்: 1,230,020
  • மகாராஷ்டிரா: 1,106,998
  • உத்தரப்பிரதேசம்: 497,130
  • ஜார்கண்ட்: 457,628
  • டெல்லி: 118,858
  • ஹரியானா: 87,952
  • உத்தரகாண்ட்: 65,631 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!