தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை !

0
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை !

அலுவக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

அலுவக உதவியாளர் பதவிக்கு 11 பணியிடங்கள் மற்றும் இரவு காவலர் பதவிக்கு 2 பணியிடங்கள் என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.01.01.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி. அருந்ததியர் (SC A),எஸ்.சி.((SC). பழங்குடியினர்((ST) பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 க்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும்.

அலுவக உதவியாளர் பதவிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15700 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15700 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் – 637 003 என்ற முகவரிக்கு 04.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!