‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவிற்கு திருமணம் – கல்யாண கோலத்தில் வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஷாக்!

0
'பிக் பாஸ்' நமீதா மாரிமுத்துவிற்கு திருமணம் - கல்யாண கோலத்தில் வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஷாக்!
'பிக் பாஸ்' நமீதா மாரிமுத்துவிற்கு திருமணம் - கல்யாண கோலத்தில் வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஷாக்!
‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவிற்கு திருமணம் – கல்யாண கோலத்தில் வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் முதன்முறையாக களமிறங்கிய திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து, திருநங்கை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

பிக்பாஸ் நமீதா மாரிமுத்து

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அவர்கள் அனைவரும் புது முகங்களாக மாறுபட்ட துறையை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். ஆனால் அந்த போட்டியில் அவர் வந்து ஒரே வாரத்தில் வெளியேறினார். அவர் இருந்த ஒரே வாரத்தில் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை பற்றி அவர் பேசியது அனைவரின் மனதை கவர்ந்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்துடன் வெளியேறிய சிபி – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். இந்நிலையில் நமீதா மாரிமுத்து, Mr.india கோபி உடன் இணைந்து திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் நமீதாவுக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து அவர் கூறுகையில், திருநங்கைகளின் திருமண வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போட்டோஷூட் எடுத்திருக்கிறோம். உங்களது வாழ்க்கையை நீங்க தான் தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து LGBT சமூகத்தினருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்.

மனைவியை விவாகரத்து செய்யும் ‘பிக் பாஸ்’ அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

மேலும் தனக்கு திருமணம் ஒன்று நடந்தால் அது திருப்பதியில் நடக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என முன்னுதாரணமாக நமீதா மாரிமுத்து இருக்கிறார். மேலும் கோபிநாத் தன்னுடைய பிட்னஸ் பற்றி அவர் சொல்லி இருக்கிறார். இந்த போட்டோஷூட் பார்த்த நமீதா ரசிகர்கள் பெண்களை விட அழகாக இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கோபிநாத் இப்படி நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!