மனைவியை விவாகரத்து செய்யும் ‘பிக் பாஸ்’ அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
மனைவியை விவாகரத்து செய்யும் 'பிக் பாஸ்' அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
மனைவியை விவாகரத்து செய்யும் 'பிக் பாஸ்' அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
மனைவியை விவாகரத்து செய்யும் ‘பிக் பாஸ்’ அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் அபிநய் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் சில செய்திகளுக்கு தற்போது அபிநய் தரப்பில் இருந்து மறைமுகமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அபிநய்

பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்களின் வாழ்க்கை என்பது பலராலும் பேசப்படக்கூடிய பொது விஷயமாக தான் இருந்து வருகிறது. குறிப்பாக நடிகர், நடிகைகள் உடுத்துவதில் இருந்து வெளி இடங்களுக்கு செல்வது வரை அனைத்தும் பேசப்படக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பிரபலங்களை ஒரு வீட்டுக்குள் வைத்திருந்தால் அதை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து ரூ.11 லட்சம் பணத்துடன் வெளியேறிய அமீர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இந்தவாறு வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெறும் சில விஷயங்கள் அன்றிலிருந்து இன்று வரையும் சர்ச்சைக்குரியதாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் பேசப்பட்ட முக்கிய விஷயமாக இருந்தது அபிநய் மற்றும் பாவனி பற்றி தான். இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ரொமான்டிக் உறவு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் பெரிய பிரச்சனையாக வெடித்திருந்தது.

ஆனால் இந்த பிரச்சனை எழுந்த சில வாரங்களிலேயே அபிநய் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து எல்லா விதமான பிரச்சனைகளிலும் தனக்கு ஆதரவு அளித்த குடும்பத்தினருக்கு நன்றி கூறிய அவர், அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அபிநயின் மனைவி அபர்ணா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவரது பெயரை மாற்றி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் விவாகரத்து வரை பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

பசங்க மீது பாசமாக இருக்கும் கோபி, நம்பிக்கை இல்லாமல் பேசும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதாவது, திடீரென சமூக வலைதளத்தில் அபிநயா தனது பெயரை மாற்றியதால் அபிநயை அவர் விவாகரத்து செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் அபிநய், தனது குடும்பத்தாருடன் அவருக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்று சில மறைமுகமான தகவலை ரசிகர்களுடனான கேள்வி, பதில் நிகழ்ச்சியின் போது கொடுத்துள்ளார். இருந்தாலும் இந்த சர்ச்சைக்கு அபிநய் மற்றும் அபர்ணா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!