விஜய் டிவி பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை நினைவு கூறும் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை நினைவு கூறும் 'நம்ம வீட்டு கல்யாணம்' - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை நினைவு கூறும் 'நம்ம வீட்டு கல்யாணம்' - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை நினைவு கூறும் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ – ப்ரோமோ ரிலீஸ்!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் திருமண நாளின் சிறப்பு நிகழ்வுகளை நினைவு கூறும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று புதிதாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நம்ம வீட்டு கல்யாணம்:

விஜய் டிவியில் எப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் தான் சென்று கொண்டிருக்கும். இதனால் தான் எப்போதும் மக்கள் விஜய் டிவியை முன்னிலையில் வைத்துள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் அவர்கள் புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் வரை ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் நம்ம வீட்டு கல்யாணம். பிரபலங்கள் தங்களின் திருமணத்தை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது தான் இந்த நிகழ்ச்சி.

நிறைமாத கர்ப்பத்தோடு ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அவர்களின் திருமண முறை, சடங்குகள், அதில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் போன்றவற்றை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். தங்களின் விருப்பமான பிரபலங்களின் திருமண கொண்டாட்டங்களை அறிந்து கொள்வதில் ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த நிகழ்ச்சி மீண்டும் விஜய் மியூசிக் சேனலில் வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!

அதில், விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்து கொள்கின்றனர். பிக் பாஸ் ஆரி, சூப்பர் சிங்கர் நகுல், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா, வைஷாலி போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் என்பது கூடுதல் விருந்தாக அமைய இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!