நிறைமாத கர்ப்பத்தோடு ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
நிறைமாத கர்ப்பத்தோடு 'ராஜா ராணி 2' ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நிறைமாத கர்ப்பத்தோடு 'ராஜா ராணி 2' ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நிறைமாத கர்ப்பத்தோடு ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் முக்கிய தொடரான ராஜா ராணி 2 சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆல்யா தனது பிரசவ காலம் நெருங்கியுள்ளதால் சீரியலில் இருந்து விலகி தற்போது சுற்றுலா சென்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

விஜய் டிவியில் முன்னனி நடிகர், நடிகைகள் நடிக்கும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்ற தொடர்களின் சீசன் 2 சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல்களில் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் நடிகை ஆல்யா மானசா, சித்து, விஜே அர்ச்சனா போன்ற பலரும் நடித்து வருகின்றனர். தற்போது மிகவும் பரபரப்பாக சென்று வரும் இந்த சீரியலில் நடிக்கும் ஆல்யா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!

இவர் கர்ப்பமாகிய விஷயம் தெரியவந்த பின்னர் சீரியலில் இருந்து விலகி விடுவார் என்று பலரும் பயந்து வந்தனர். ஆனால் தான் தொடர்ந்து நடிக்க இருப்பதாக ஆல்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீரியல் இயக்குனரும் ஆல்யா தான் சந்தியா கதாபாத்திரத்தில் கட்டாயம் நடிப்பார் என்றும், அவருக்காக கதையில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்படும் என்றும் கூறினார். தற்போது ஆல்யா நிறைமாத கர்ப்பதோடு தான் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” ஷபானா கணவர் ஆர்யனுடன் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

இந்நிலையில், தற்போது ஆல்யா ராஜா ராணி 2 ஷூட்டிங்கில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து அவரது மகள் செய்து வரும் சேட்டைகளை யூடுயூப் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். குழந்தை பிறக்க இருக்கும் சமயத்தில் தான் ஆல்யா ஓய்வில் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போதே அவர் ஓய்வில் சென்றுள்ளது அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!