NABCONS நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

NABCONS நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனம் (NABCONS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Middle Level Consultant, Enumerators பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் (NABCONS) Middle Level Consultant பணிக்கு என 03 பணியிடங்களும், Enumerators பணிக்கு என 10 பணியிடங்களும் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture, Horticulture, Forestry, Agricultural Engineering போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Natural Resource Management / Financing / Value Chain Management / Agri. Marketing போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 4 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview ஆகிய முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!