தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5G சேவை அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!

0
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5G சேவை அறிமுகம் - முகேஷ் அம்பானி அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5G சேவை அறிமுகம் - முகேஷ் அம்பானி அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5G சேவை அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!

தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5G சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அந்த வகையில் சென்னையிலும் 5G சேவை தீபாவளி முதல் அறிமுகமாக இருக்கிறது.

5G சேவை அறிமுகம்

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் பெற்றது. அதாவது, ஜியோ நிறுவனம் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகிய நிறுவனத்துடன் மோதி ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தனக்கு சொந்தமாகியுள்ளது. இதற்கு பிறகு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் செப்டம்பர் 29 ஆம் தேதி 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி என பலரும் கலந்துகொண்டனர். அப்போது, தீபாவளி முதல் சென்னையில் 5G சேவையை தொடங்கவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்திய மூத்த குடிமக்களுக்கான பெர்த் டிக்கெட் முன்பதிவு – IRCTC முக்கிய விளக்கம்!

மேலும், சென்னை மட்டுமல்லாமல் தீபாவளி முதல் கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களிலும் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜியோ 5G சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 4G சேவையை விட 5G சேவை 10 மடங்கு வேகமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். தற்போது வரைக்கும் வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரு மாதத்திற்கு 20GB வரைக்கும் உபயோகம் செய்கின்றனர். 5G சேவை அறிமுகமான பிறகு இது மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!