இந்திய மூத்த குடிமக்களுக்கான பெர்த் டிக்கெட் முன்பதிவு – IRCTC முக்கிய விளக்கம்!

0
இந்திய மூத்த குடிமக்களுக்கான பெர்த் டிக்கெட் முன்பதிவு - IRCTC முக்கிய விளக்கம்!
இந்திய மூத்த குடிமக்களுக்கான பெர்த் டிக்கெட் முன்பதிவு - IRCTC முக்கிய விளக்கம்!
இந்திய மூத்த குடிமக்களுக்கான பெர்த் டிக்கெட் முன்பதிவு – IRCTC முக்கிய விளக்கம்!

இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் சீட் புக் செய்வதில் எதிர் கொள்ளும் பிரச்னை குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே சேவா விளக்கம் அளித்துள்ளது.

ரயில் பெர்த் பதிவு:

இந்தியாவில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவில்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஐஆர்சிடிசி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் மூத்த குடிமக்கள் ரயில் பெர்த் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மேல் பெர்த் ஒதுக்கினால் அவர்கள் மேலே எவ்வாறு ஏறி அமர்ந்து பயணிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையில் 45 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் பெண் பயணிகளுக்கு தானியங்கி கீழ் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே சேவா தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் வெளியீடு!

மேலும் மூத்த குடிமக்களுக்கான முன்பதிவில் தனி ஒதுக்கீடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் அத்தகைய வகுப்பு இரண்டிலும் சில கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்லீப்பர் வகுப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் ஆறு கீழ் பெர்த்களும், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு வகுப்புகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று கீழ் பெர்த்களும் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், கீழ் பெர்த் ஒதுக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here