‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புது வீட்டுக்கு குடியேறிய மூர்த்தி, தனம்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன் மூர்த்தி மற்றும் அண்ணி தனம் இருவரும் புதிய வீட்டுக்கு குடி வந்ததை போல வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கும் நிலையில், அது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்களின் விருப்பத்துக்கேற்ற கதைக்களத்துடன் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அண்ணன், தம்பிகள் என கூட்டு குடும்ப வாழ்க்கையை அழகாக பிரதிபலித்து வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதன் நடிகர், நடிகைகள் தான்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
ஏனென்றால் இத்தொடரில் காட்டப்படும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர், நடிகைகளினால் தான் இத்தொடருக்கு ஏகப்பட்ட ரீச் கிடைத்துள்ளது. சமீப காலமாக இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் இருந்து கடைக்குட்டி கண்ணன் விலகி இருக்கும் நிலையில் இவர் எப்போது குடும்பத்துடன் சேருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் அண்ணன் மூர்த்தி மற்றும் அண்ணி தனம் இருவரும் புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல இருக்கும் சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் வைரலானது.
அந்த வகையில் இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பலரும், கண்ணன் நிமித்தமாக தான் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் போல என்றும் கணித்து வந்தனர். ஆனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி நடிகர் ஸ்டாலின் மற்றும் தனம் சுஜிதா இருவரும் புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல வெளியான புகைப்படங்கள் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் மீண்டுமாக வைரலாகி வருகிறது.