கண்ணனிடம் பாசமாக பேசிய கதிர் ஜீவா, கயல் பிறந்தநாள் கொண்டாட திட்டமிடும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனிடம் பாசமாக பேசிய கதிர் ஜீவா, கயல் பிறந்தநாள் கொண்டாட திட்டமிடும் குடும்பத்தினர் - இன்றைய
கண்ணனிடம் பாசமாக பேசிய கதிர் ஜீவா, கயல் பிறந்தநாள் கொண்டாட திட்டமிடும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனிடம் பாசமாக பேசிய கதிர் ஜீவா, கயல் பிறந்தநாள் கொண்டாட திட்டமிடும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் மற்றும் ஜீவா அழைத்து பணத்தை எடுத்தது யாரு என கண்டுபிடித்ததாக சொல்கிறார். கண்ணன் அண்ணன்கள் பேசியதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா பணத்தை கதிரிடம் கொடுக்க அவர் சந்தோசப்படுகிறார். முல்லைக்கு தெரிந்தால் சந்தோஷப்படுவார் என சொல்கிறார். பின் கண்ணனிடம் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார் என சொல்ல, நான் உங்களுக்காக நல்ல டீ போட்டு வைத்திருக்கேன் அதை கொண்டு வந்து கொடுக்கிறேன் என மீனா செல்கிறார். ஜீவா கதிர் வீட்டு வாசலுக்கு சென்று கண்ணனை கூப்பிடுகிறார்கள். அப்போது கண்ணன் வர எல்லாம் பண்ணிட்டு எப்படி வருகிறான் பாரு என சொல்கிறார்கள்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட பாரதி, லட்சுமியிடம் உன் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன் என சொல்லும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

என்ன அண்ணா என கண்ணன் கேட்க, பணத்தை எடுத்தவனை சிசிடிவி மூலமாக கண்டுபிடித்து மீனா சொல்லிவிட்டார் என சொல்ல மீனா அண்ணியா அவரை கூப்பிடுங்கள் நான் நன்றி சொல்ல வேண்டும் என கூப்பிட, அண்ணன் இருக்கிறார் என கதிர் ஜீவா சொல்கிறார்கள். பின் கண்ணனிடம் உன் மீது தப்பு இருந்தால் நீ அதை ஒப்புக் கொள்ள கூடாது என சொல்கிறார். பின் கண்ணன் இப்படி அடிக்கடி என்னை கூப்பிட்டு பேசுங்க எனக்கு தைரியமாக இருக்கும் என சொல்ல கண்ணனை அணைத்து கொள்கிறார்கள்.

முல்லை மீனாவிற்கு டீ கொடுக்க இது டீ இல்லை காபி என முல்லை சொல்கிறார். உங்க அம்மா உங்களுக்கு காபி தான் பிடிக்கும் எனசொன்னது ஞாபகம் இருக்கிறது என சொல்கிறார். நீங்க செய்த உதவிக்காக என்னால் இதான் செய்ய முடிந்தது. நீங்க அவங்களை காப்பாற்ற இப்படி செய்வீங்க என நான் எதிர்பார்க்கவே இல்லை என முல்லை சொல்கிறார். அவங்க பணம் பற்றி பேச இவங்க பொய் சொல்லிகிட்டே இருந்தாங்க என்ன நடக்குமோ என நான் பயத்தில் இருந்தேன் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. நீங்க அவங்களை மட்டும் இல்ல, கண்ணன் மீது போட்ட திருட்டு பழியை நீக்கியுள்ளது என சொல்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானாவுடனான திருமணத்திற்கு பின்பு ஆர்யன் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

கண்ணன் திடிருக்கமாட்டேன் என எனக்கு தெரியும் ஆனால் எப்படி நிரூபிக்க முடியும் அதான் இப்படி செய்தேன் என சொல்ல, மீனாவை முல்லை கட்டி அணைத்து கொள்கிறார் ரொம்ப நன்றி என முல்லை சொல்கிறார். கண்ணன் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படணும் என கதிர் கேட்க அவன் சந்தோசமாக இருக்கான் அதான் என மூர்த்தி சொல்கிறார். கண்ணன் திருடவில்லை என மீனா செய்ததை நினைத்து தனம் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார் என சொல்ல, ரொம்ப நாள் அப்பறம் நன்றாக சாப்பிட்டோம் என சொல்கிறார். அக்கா உள்ளே பால் கோவா வேற செய்கிறார்.

மூர்த்தி மீனா செய்ததை பாராட்ட, கண்ணன் விஷயம் சரியான பின் வீட்டில் எல்லாருக்கும் எப்படி சந்தோசமாக இருக்கிறது பாத்தியா, அதுவும் இல்லாமல் கயல் பிறந்தநாள் வேற வருகிறது என சொல்கிறார். அம்மா இறந்ததால் பெரிதாக நிகழ்ச்சி எதுவும் வைக்க கூடாது என ஜீவா சொல்ல, மூர்த்தி கயல் பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவேண்டும் என அண்ணிக்கு ஆசை ஆனால் அதெல்லாம் முடியாது என மூர்த்தி சொல்ல அப்போ வீட்டில் வைக்க போறோமா என கதிர் கேட்கிறார். மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

ஆமாம் வீட்டில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். கதிர் மண்டபம் எல்லாம் பார்த்தாச்சு என சொல்ல, மூர்த்தி வேண்டாம் என சொல்லிவிடு என சொல்கிறார். மீனா அம்மா அப்பா ஆசையாக இருக்காங்க மாமா அதனால் மண்டபத்தில் வைப்போம் என சொல்கிறார். கயல் பிறந்தநாளுக்கு இப்படி யோசிக்க வேண்டுமா என கேட்கிறார். பின் கயல் வளர்ந்த பின் இப்படி பிறந்தநாள் கொண்டாடுறீங்க என கேட்பார் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here