குரங்கம்மை நோய் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு – WHO பொது செயலாளர் பேட்டி!

0
குரங்கம்மை நோய் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு - WHO பொது செயலாளர் பேட்டி!
குரங்கம்மை நோய் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு - WHO பொது செயலாளர் பேட்டி!

குரங்கம்மை நோய் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு – WHO பொது செயலாளர் பேட்டி!

குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் குரங்கம்மை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை நோய்:

கொரோனா தொற்றை தொடர்ந்து பொதுமக்களை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. அதாவது கடந்த 2 வருடங்களில் கொரோனா நோய் தொற்றுக்கு அடுத்தப்படியாக தற்போது குரங்கம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியது, ஆப்பிரிக்க பகுதிகளில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. மேலும் குரங்கம்மை நோயால் உலகம் முழுவதும் 72 நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Data Entry Operator வேலை – முழு விவரங்களுடன்!

மேலும் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரு நோய்த்தொற்று பரவலானது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று முடிவு செய்வதற்கு 5 விஷயங்கள் பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. மேலும் மனித ஆரோக்கியத்திற்கான ஆபத்து, சர்வதேச பரவல் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியம் ஆகியவை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் குரங்கம்மையின் ஆபத்து, உலக அளவில் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மித அளவில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோயால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது என டெட்ராஸ் கூறியுள்ளார். இந்த தருணத்தில் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான தற்போது தொடர்ந்து குறைவாக உள்ள போதும், உலக அளவில் நோய் பாதிப்பு பரவுவதற்கான ஆபத்தும் தெளிவாக காணப்படுகிறது. புதிய வழிகளிலான பரிமாற்றத்தினால், ஒரு பரவலானது உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. அதை பற்றி சிறிதளவே நமக்கு புரிந்துள்ளது. இந்த பரவலானது, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளில் உள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!