இனி ரயில்களில் குழந்தைகளுக்கான டிக்கெட் விநியோகத்தில் மாற்றம்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!

0
இனி ரயில்களில் குழந்தைகளுக்கான டிக்கெட் விநியோகத்தில் மாற்றம்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!
இனி ரயில்களில் குழந்தைகளுக்கான டிக்கெட் விநியோகத்தில் மாற்றம்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!
இனி ரயில்களில் குழந்தைகளுக்கான டிக்கெட் விநியோகத்தில் மாற்றம்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!

கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச ரயில் பயணத்தில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ரயில்வே அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

இலவச ரயில் பயணம்:

குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் செல்ல நினைக்கும் அநேகர் முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் பயணத்தை தான். உண்மை என்னவென்றால் ரயிலில் பயணிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவும், அதையும் தாண்டி இயற்கையோடு இணைந்த பயணமாகவும் இருக்கிறது. முக்கியமாக நோய்த் தொற்று பரவி வரும் இந்த சூழலில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டியது அவசியமானது. இதற்காகவே தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதாவது, பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் உற்றார் உறவினர் வீட்டுக்கு செல்லவோ அல்லது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பவர்களோ ரயில் பயணத்தை தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்காகவே இந்தியன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. மேலும், பயணிகள், 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வேண்டுமென்றால் டிக்கெட் பெற வேண்டும், இல்லையெனில் இலவச பயணம் என கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது வரை இருந்து வருகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளில் திருத்தம் – அரசு முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன எனவும், 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற வேண்டும் என்றும் சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. அதனால் இதற்கு தெளிவான பதிலை கொடுக்க விரும்பிய ரயில்வே அமைச்சகம் ரயில்களில் பயணம் செய்கிற 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அது வழங்கப்படமாட்டாது. அப்படி தனி இருக்கை,படுக்கை வேண்டுமெனில் பெரியவர்களைப் போன்ற முழு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!