தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளில் திருத்தம் – அரசு முக்கிய அறிவிப்பு!

1
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளில் திருத்தம் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளில் திருத்தம் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளில் திருத்தம் – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிகள் திருத்தம்:

தமிழகத்தில் திமுக கட்சியினர் சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தனர். அதில் பெண்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநகர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெண்களுக்கு மேற்கண்ட திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணிகள் முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல் மற்றும் பாலியல் ரீதியாக புண்படுத்தகூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்துதல் கூடாது. அத்துடன் நடத்துனர் எச்சரிக்கை விடுத்த பிறகு பிரச்சனைக்கு உள்ளான பயணிகள் இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு – அதிக குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்!

அத்துடன் பெண்கள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும் போது தவறான நோக்கில் தொடக்கூடாது. மேலும் பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது அவர்களிடம் தேவையற்ற கேள்விகள் கேட்கக் கூடாது என்றும், எந்தவொரு பயணிக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும் போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!