BARC வேலைவாய்ப்பு 2022 – 12 வது தேர்ச்சி / பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேவை!

0
BARC வேலைவாய்ப்பு 2022 - 12 வது தேர்ச்சி / பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேவை!
BARC வேலைவாய்ப்பு 2022 - 12 வது தேர்ச்சி / பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேவை!
BARC வேலைவாய்ப்பு 2022 – 12 வது தேர்ச்சி / பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேவை!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Nurse, Scientific Assistant, Sub Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.44,900/- வரை மாத ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bhabha Atomic Research Centre (BARC)
பணியின் பெயர் Nurse, Scientific Assistant, Sub Officer
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாபா அணு ஆராய்ச்சி மைய காலிப் பணியிடங்கள்:

  • Nurse – 13 பணியிடங்கள்
  • Scientific Assistant (Pathology) – 02 பணியிடங்கள்
  • Scientific Assistant (Nuclear Medicine Technologist) – 08 பணியிடங்கள்
  • Scientific Assistant (Medical Social Worker) – 01 பணியிடம்
  • Scientific Assistant (Civil) – 08 பணியிடங்கள்
  • Sub Officer – 04 பணியிடங்கள்

BARC வயது வரம்பு:

  • Sub Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 12.09.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 40 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 12.09.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 30 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.SC / ST – 05 வருடங்கள் மற்றும் OBC – 03 வருடங்கள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

BARC கல்வி விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Nurse – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Nursing & Midwifery பாடப்பிரிவில் Diploma (அல்லது) Nursing பாடப்பிரிவில் B.Sc
  • Scientific Assistant (Pathology) – B.Sc மற்றும் Medical Lab Technology பாடப்பிரிவில் Post Graduate Diploma (DMLT) (அல்லது) Medical Lab Technology பாடப்பிரிவில் B.Sc Degree
  • Scientific Assistant (Nuclear Medicine Technologist) – B.Sc மற்றும் DMRIT / DNMT / DFIT (அல்லது) Nuclear Medicine Technology பாடப்பிரிவில் B.Sc Degree
  • Scientific Assistant (Medical Social Worker) – Medical Social Work பாடப்பிரிவில் Post Graduate Degree
  • Scientific Assistant (Civil) – Civil Engineering பாடப்பிரிவில் Diploma
  • Sub Officer – 12 ஆம் வகுப்பு மற்றும் National Fire Service College-ல் Sub-Officer Course முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையான அனுபவம் போன்ற கூடுதல் தகவல் பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • பாபா அணு ஆராய்ச்சி மைய சம்பளம்: Nurse பணிக்கு ரூ.44,900/- என்றும்,
  • Scientist Assistant பணிக்கு ரூ.35,400/- என்றும்,
  • Sub Officer பணிக்கு ரூ.35,400/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • BARC தேர்வு செய்யும் விதம்: விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    Preliminary Test

  • Advanced Test
  • Skills Test
  • Personal Interview
Exams Daily Mobile App Download

பாபா அணு ஆராய்ச்சி மைய விண்ணப்ப கட்டணம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD மற்றும் பெண்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

BARC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 12.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!