மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.63200/-
பாதுகாப்பு அமைச்சகம் ஆனது காலியாக உள்ள Lower Division Clerk பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Lower Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் | Ministry of Defence |
பணியின் பெயர் | Lower Division Clerk (LDC) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | With in 21 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாதுகாப்பு அமைச்சகம் பணியிடங்கள்:
Lower Division Clerk (LDC) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ளது.
BSF எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு – 40 காலிப்பணியிடங்கள் || விரைவில் விண்ணப்பியுங்கள்!
Lower Division Clerk கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகம் வயது வரம்பு:
பாதுகாப்பு அமைச்சக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Lower Division Clerk ஊதியம்:
LDC பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 2 ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Lower Division Clerk விண்ணப்பிக்கும் விதம்:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Link