CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை!!

3
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை!!

கொரோனா தொற்றின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முக்கிய ஆலோசனை:

கொரோனா தொற்றின் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெருவாரியான கல்வி நிறுவனங்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் இறுதி தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி அறிவித்திருக்கிறது.

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்க இருந்தது. தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கருதி மறுஅறிவிப்பு வரும் வரை தேர்வை தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்வு நடத்தக் கூடாது என்று பல தரப்புகளில் இருந்துக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தேர்வு தொடர்பான அறிவிப்பு வரும் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடன் ஆன்லைன் தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. +2ஆல் பாஸ் செய்தால் என்னால் ரீ எக்சாம் எழுத முடியாது. ஏனென்றால் நான் 2009 மாணவி என் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு என்றேன்.இவ்வளவு வருடமாக என்னால் பரீட்சை எழுத முடியவில்லை. இப்போது நான் பரீட்சை எழுத கடந்த 1வருடமாக காத்திருக்கிறேன். இதில் தான் என் வருங்கால வாழ்க்கை அடங்கி உள்ளது. நான் மேல் நாட்டில் வேலை மற்றும் என் படிப்பை தொடறுவதற்க்கான வசதி எனக்கு இப்போது தான் கிடைத்துள்ளது. என்னை போல இன்னும் படிப்பை பாதியிலேயே விட்டு மறுபடியும் தொடர நிறைய மாணவர்கள் காத்துள்ளோம்.குறிப்பாக என்னை போன்ற பெண்கள். தயவு செய்து எங்களை போன்ற மாணவர்களும் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுமாறு தயவு செய்து +2 ஆல் பாஸ் செய்யாமல் பொது தேர்வு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏 நன்றி.

    • Yaa ok with u r lines udhayanila but the thing is u r talking abt u r self pls note of others how many lose their parents how many students are infected how many got family situation critical all should bee seen If the conduct the exam more students can loss their life this is not joke u can get aptitude test on college no one is support u just a man from kerala except him i don’t know what u people are thinking about the students life is they are looking like toys to play with them pls take that comment 🙏

  2. Hello sir please cancel the exam because we are not attent aany online class or some attent online class many cbse student will not study so my concern please cancel the exam we are not interst to write @this corona pandemic condition pl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!