தமிழக அரசு வருமானம் & சாதி சான்றிதழ்கள் வழங்கல் – அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருமான மற்றும் சாதிச் சான்றிதழ்களை அதிகாரிகள் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் உத்தரவு:
தமிழகத்தில் சாதி, வருமான சான்றிதழ்கள் போன்றவை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் பள்ளி, கல்லூரிகளில் சேர இத்தகைய சான்றுகள் தேவைப்படுகிறது. இவற்றை வட்டாட்சியர்கள் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை பெற இந்த சான்றிதழ்கள் அவசியமாகும்.
ஆகஸ்ட் 1 வரை 10 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி!
கல்வி உதவித்தொகைகளை பெறவும், சாதி வாரியாக சில நலத்திட்டங்களை பெற சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் அவசியமாகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலித்து தேவையற்ற காலவிரயத்தை தவிர்த்து மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல வசதியாக அதற்கென நாட்களை ஒதுக்கி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் பெற தேவையின்றி மாணவர்களை அலுவலகங்களுக்கும் இ-சேவை மையங்களுக்கும் அலைய விடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.