Daily Current Affairs July 29 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 29 2021 in Tamil
Daily Current Affairs July 29 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இந்திய  பிரதமர் நரேந்திர மோடி எஸ்.ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

  • இரண்டு நாள் பயணமாக ஜூலை 28 அன்று இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
  • இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டன.

எஸ்.ஜெய்சங்கர் உடனான சந்திப்பு

  • எஸ்.ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், கரோனா பரவலைத் தடுப்பதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, வளைகுடா நாடுகள் ஆகியவற்றின் பிரச்னைகள் ஆகியவை குறித்து பிளிங்கன் விவாதித்தார்.

அஜித் தோவல் உடனான சந்திப்பு

  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ஆன்டனி பிளிங்கன் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
  • இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

வணிக உற்பத்திக்காக மரபணு மாற்றப்பட்ட ‘தங்க அரிசி’(‘golden rice’) க்கு  ஒப்புதல் அளித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ்

  • குழந்தை பருவ ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க உதவும் வகையில் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட பல்வேறு வகையான அரிசி, மரபணு மாற்றப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ வணிக ரீதியான உற்பத்திக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது.
  • இந்த தங்க அரிசியை வேளாண்மைத் துறை-பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (DA-PhilRice) சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) உடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
  • IRRI – International Rice Research Institute
  • DA-PhilRice – Department of Agriculture-Philippine Rice Research Institute

பிலிப்பைன்ஸ்

  • தலைநகரம் : மணிலா
  • நாணயம்: பெசோ
  • தலைவர்: ரோட்ரிகோ டூர்ட்டே
 தேசிய நிகழ்வுகள்

காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக (டிஐசிஜிசி) சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத்தொகைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு அளிக்கும் வகையில் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக (DICGC) சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • வைப்புத்தொகைகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
  • அதன்படி 1961-ஆம் ஆண்டின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
  • இந்த மசோதா சட்டமானால், நிதி நெருக்கடியில் தவிக்கும் வங்கிகளில் வைப்புத்தொகை வைத்துள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது..
  • DICGC – Deposit Insurance and Credit Guarantee Corporation

எல்எல்பி சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • பல்வேறு நிறுவனங்கள் தொழில் செய்வதை எளிமையாக்கும் வகையில், நிறுவனங்களுக்கான பொறுப்புகள் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைச் சட்டத்தில் (LLP) உள்ள அபராதம் விதிக்கப்படக் கூடிய பிரிவுகளை நீக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி, அந்தச் சட்டத்தில் உள்ள அபராதம் விதிக்கப்படக் கூடிய பிரிவுகள் 22-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதால், நாடு முழுவதும் 2.30 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2009-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தில் முதல் முறையாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • LLP – Limited Liability Of A Company

ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

  • ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
  • அந்த மாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ‘ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பி இயல்பான சூழ்நிலை உருவாக வேண்டும். அதன்பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும்.
  • தேசிய நலன் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நலன் கருதிதான் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமை பணியியல் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சிப்பெறுவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு உத்தரகண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • உதய்மன் சத்ர யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணியியல் தேர்வுகளில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் முதல் 100 பேருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரகண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணியியல் தேர்வானது ஆண்டுதோறும் முதற்கட்டத்தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
  • இதில் முதற்கட்டத் தேர்வுகளில் தேர்ச்சிபெறுவோருக்கு அடுத்தடுத்த தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு முன் தங்களை தயார் செய்துகொள்ள அரசின் இந்த புதிய திட்டம் பெரிதும் உதவிகரமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
  • மேலும் , இந்தத் திட்டம் குடிமைப் பணியியல் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகம் பேர் குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1926
  • தலைவர் : பிரதீப் குமார் ஜோஷி
மாநில  நிகழ்வுகள்

முதுபெரும் தலைவர்  என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.

  • தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
  • அதன்படி முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு, ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த விருதினை சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

என். சங்கரய்யா

  • முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா. தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், நிகழாண்டுக்கான தகைசால் தமிழர் விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது.
  • இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியவர்,
  • தகைசால் தமிழர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
  • 1967-இல் மொழிப் பிரச்னை தொடர்பாக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது என்.சங்கரய்யாவின் உரை முக்கியத்துவம் வாய்ந்தது.
  • தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென வற்புறுத்தியவர்.
அறிவியல் / தொழிற்நுட்பம்

சந்திரயான்-3

  • அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில்( ஜூலை – செப்டம்பர் ) சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-1

  • சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.
  • திட்ட இயக்குனர் – மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்-2

  • நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது
  • திட்ட இயக்குனர் – மயில்சாமி அண்ணாதுரை
இறப்பு

இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் நந்து நடேகர் (88) காலமானார்.

  • மகாராஷ்டிர மாநிலம் சங்லியில் 1933-இல் பிறந்த நடேகர், தொடக்கத்தில் டென்னிஸ் வீரராகவே இருந்தார். 1952-க்குப் பிறகு, அவரது பாதை பாட்மிண்டன் பக்கம் திரும்பியது.
  • தேசிய, சர்வதேச அளவில் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் நூற்றுக்கும் அதிகமான பட்டங்களை வென்றுள்ள நடேகர், களத்தில் விளையாடுவது பாலே நடனத்துக்கு இணையானதாக இருக்குமென வர்ணிக்கப்படுகிறது.
  • 6 முறை தேசிய சாம்பியனான நடேகர், 20-ஆவது வயதில் சர்வதேச களத்தில் இந்தியாவுக்காக களம் காணத் தொடங்கினார்.
  • 1956-இல் மலேசியாவில் நடைபெற்ற செலாங்கோர் போட்டியில் சாம்பியன் ஆனதன் மூலம், பாட்மிண்டனில் சர்வதேச போட்டியில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1961-இல் அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1990 – 94 காலகட்டத்தில் மகாராஷ்டிர பாட்மிண்டன் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
நியமனம்

HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநராக சி.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநராக சி.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
  • இதற்கு முன்பு சிவ் நாடார் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
விருதுகள்

காஜல் சக்ரவர்த்தி நார்மன் போர்லாக் தேசிய விருதை வென்றுள்ளார்.

  • மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன்புரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) நிறுவிய வாழ்க்கை முறை நோய்களை எதிர்ப்பதற்கான ஆராய்ச்சிக்கான நார்மன் போர்லாக் தேசிய விருதை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) முதன்மை விஞ்ஞானி கஜல் சக்ரவர்த்தி வென்றுள்ளார்.
  • இந்த விருது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. மற்றும் பரிசு தொகையாக 10 லட்சம் வழங்கப்படுகிறது.
  • ICAR – Indian Council of Agricultural Research
  • CMFRI – Central Marine Fisheries Research Institute

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்

  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :1929
  • தலைமையகம் : நியூடெல்லி
புத்தகம்

அமித்தாப் காந்த்  ‘ஷிஃப்டிங் ஆர்பிட்ஸ்: டிகோடிங் தி ட்ராஜெக்டரி ஆஃப் தி இந்தியன் ஸ்டார்ட் அப் ஈகோசிஸ்டம்’ என்ற  புத்தகத்தை வெளியிட்டார்.

  • நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அமிதாப் காந்த் இந்திய தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த ‘ஷிஃப்டிங் ஆர்பிட்ஸ்: டிகோடிங் தி ட்ராஜெக்டரி ஆஃப் தி இந்தியன் ஸ்டார்ட் அப் ஈகோசிஸ்டம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்த புத்தகத்தை இந்தியா இணையதள புதுமை  மற்றும் தொழில்முனைவோர் அமைப்பு ஏற்பாடு செய்தது.(iVEIN)
  • iVEIN – Innovation Venturing and Entrepreneurship in India Network.

“ஏன் நாங்கள் முழங்காலில் எழுந்திருக்கிறோம்” என்ற புத்தகத்தை மைக்கேல் அந்தோனி ஹோல்டிங் எழுதி உள்ளார்.

  • ஜமைக்கா கிரிக்கெட் வர்ணனையாளரும், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மைக்கேல் அந்தோனி ஹோல்டிங், “நாங்கள் ஏன் முழங்குகிறோம்” (“Why We Kneel How We Rise” )என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.

‘காஷ்மீர் கி கியாரி மே ஆக் கி லப்டே ஆகிர் கப் தக்?’ என்ற புத்தகத்தை பீனா புட்கி எழுதியுள்ளார்.

  • மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி காஷ்மீர் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான பீனா புட்கி எழுதிய ‘காஷ்மீர் கி கியாரி மெய் ஆக் கி லப்டே ஆகிர் கப் தக்?’ (‘Kashmir Ki Kyari Mein Aag Ki Lapte Aakhir Kab Tak?’) என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டார்.
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்

இங்கிலாந்து

  • நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 4*200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இங்கிலாந்தை சேர்ந்த டாம் டீன், டன்கன் ஸ்காட், ஜேம்ஸ் கை, மேத்தியூ ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கூட்டணி தங்கம் வென்றது
  • கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் ஒலிம்பிக் நீச்சலில் இங்கிலாந்து தங்கம் வென்றது இது முதல் முறையாகும்.
  • ரஷியா வெள்ளியும், ஆஸ்திரேலியாவெண்கலமும் வென்றது.
  • இதற்கு முன் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸில் மகளிருக்கான 4*200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இங்கிலாந்து மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா

  • அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான கேட்டி லெடக்கி, மகளிருக்கான 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தங்கம் வென்றார்.
  • ஒலிம்பிக்கில் இந்தப் பிரிவில் லெடக்கிக்கு இது முதல் தங்கமாகும். இத்துடன் ஒலிம்பிக்கில் அவர் 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கங்கள் வென்றுள்ளார்.
  • அமெரிக்காவின் மற்றொரு வீராங்கனை எரிகா சல்லிவன் வெள்ளியும், ஜெர்மனியின் சாரா கோலர் வெண்கலமும் கைப்பற்றினர்.

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய வீரர்கள்

சதீஷ் குமார்

  • டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் குத்துச்சண்டைக்கான 91 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீரர் சதீஷ் குமார், ஜைமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.
  • இதையடுத்து ஆடவர் 91 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதானு தாஸ்

  • டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் வீரர் அதானு தாஸ், தென் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.
  • இதையடுத்து வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் அதானு தாஸ்.

ஹாக்கி ஆடவர் பிரிவு

  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

பி.வி.சிந்து

  • டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மியா பிளிச்பெல்ட்டை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.
  • இதையடுத்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

பூஜா ராணி

  • குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
  • முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை வீழ்த்தினார் பூஜா.
  • இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், இரு முறை ஆசிய சாம்பியனும், முன்னாள் உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியாங்கை எதிர்கொள்ளவிருக்கிறார்.

தீபிகா குமாரி

  • வில்வித்தை போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் இரு வெளியேற்றும் சுற்றுகளில் வென்று முன்னேற்றத்தில் இருக்கிறார்.
  • உலகின் முதல்நிலை வீராங்கனையாக இருக்கும் தீபிகா, முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அமெரிக்காவின் இளம் போட்டியாளரான ஜெனிஃபர் முசினோ ஃபெர்னான்டஸ் வீழ்த்தினார்.
  • அடுத்ததாக தீபிகா 3ஆவது வெளியேற்றும் சுற்றில் களம் காண இருக்கிறார்.
முக்கிய தினங்கள்

சர்வதேச புலிகள் தினம்- ஜூலை 29

  • புலிகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கும், புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 சர்வதேச புலிகள் தினத்தின் கருப்பொருள்: “அவர்களின் பிழைப்பு நம் கையில் உள்ளது”
  • நமது நாட்டின் தேசிய விலங்காக புலிகள் உள்ளன.இந்திய அரசின் முயற்சியால், புலித் திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது.
  • பெங்கால் புலிகளின் மக்கள் தொகை அவர்களின் இயற்கையான வாழ்விடங்களில் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்த திட்டம் புலியைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!