தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டை பெற தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டிலிருந்தபடி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இந்த ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

தற்போதைய காலகட்டத்தில் ரேஷன் கார்டு அவசிய ஒன்றாக இருப்பதால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் புதிய ரேஷன் கார்டு பெற தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும். இதற்கு அதிக கால வியரமும் ஆகிறது.

இதனை தவிர்க்க தற்போது ஆன்லைன் மூலமாக எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை மின் ரசீது பான் கார்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
  • முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு திரையில் ஒரு படிவம் தோன்றும் அதில் உங்களின் தகவல்களை நிரப்பு ஆவணங்களை நிரப்ப வேண்டும்.
  • இணைக்கும் ஆவணத்தில் புகைப்படத்தின் அளவு 1.0 MB அளவில் இருக்க வேண்டும்.
  • பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
  • நீங்கள் பதிவேற்றிய விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திய பிறகு reference எண் கிடைக்கும்.
  • இறுதியாக, நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்த்த பிறகு ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!