ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

0
ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை, வங்கி விடுமுறை என 9 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்தால் 4 தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

விடுமுறை அறிவிப்பு

அடுத்து வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலேயே 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மாதத்தில் 9 நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். இந்த நாட்களில் வங்கி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என பல துறைகளுக்கு பொது விடுமுறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ஏப்ரல் மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கி மற்றும் பிற ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கும். இதுமட்டுமின்றி ஏப்ரல் 16ம் தேதி லீவு எடுத்தால் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – தேர்வுகள் ஒத்திவைப்பு!

இது தவிர இந்த மாதத்தில் மூன்று சந்தர்ப்பங்கள் என ஒரு வாரத்தில் இரண்டு தொடர்ச்சியான விடுமுறைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலாவதாக குடி பத்வா மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வருகிறது. தொடர்ந்து அடுத்த வாய்ப்பு ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கிடைக்கும். மூன்றாவது வாய்ப்பு ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழன் அன்று டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி, அதனை தொடர்ந்து ஏப்ரல் 15 ஆம் தேதி புனித வெள்ளி வருகிறது. இதில் சனிக்கிழமை மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இப்போது வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் கிராம உதவியாளர் வேலை – 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

  • ஏப்ரல் 2: சைத்ரா நவராத்திரி தொடங்குகிறது.
  • ஏப்ரல் 3: முதல் ஞாயிறு
  • ஏப்ரல் 9: இரண்டாவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 10: இரண்டாவது ஞாயிறு
  • ஏப்ரல் 14: டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
  • ஏப்ரல் 15: புனித வெள்ளி
  • ஏப்ரல் 17: மூன்றாவது ஞாயிறு
  • ஏப்ரல் 23: நான்காவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 24: நான்காவது ஞாயிறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!