தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கிழடுக்கு சுழற்‌சி காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

வட தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்கள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதன்படி தருமபுரி , காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. மேலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும், கரூர், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு -10,402 பணியிடங்களை நிரப்ப அனுமதி!

அதனைத் தொடர்ந்து மேலும் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்த பருவ மழை ஏற்கனவே அறிவித்தபடி, ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளது. அதுபோல, கேரளாவில் 4 நாட்கள் முன்னதாக, வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here