தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு -10,402 பணியிடங்களை நிரப்ப அனுமதி!

0
தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு -10,402 பணியிடங்களை நிரப்ப அனுமதி!
தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு -10,402 பணியிடங்களை நிரப்ப அனுமதி!

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் கருதி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதாவது அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள் விரைவில் சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு நலத்திட்டங்களை தற்போதைய தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் செயலாற்றி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த வகையில் சமீபத்தில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலை பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும், 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

ராதிகாவிடம் பொய் சொல்லி தப்பித்த கோபி, முல்லை மாற்றத்தை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

இதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த காலிபணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் பேரில், தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு 2,229 இடங்கள் என மொத்தம் 10402 இடங்கள் நிரப்பபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காலிப்பணியிடங்களை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!