கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர் – ஆய்வில் தகவல்..!

0
கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர்
கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர்

கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர் – ஆய்வில் தகவல்..!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் தகவல்..!

இதுவரை சீனா, இத்தாலி , தென்கொரிய போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8 சதவிகிதம் பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 1.7 சதவீதம் பேரே உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவிலும் ஆண்களே 70 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி கொரோனா வைரசால் ஆண்கள் அதிக அளவில் உயிரிழப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு இயல்பிலேயே ஆற்றல் அதிகம் இருப்பதுதான் உண்மையான காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..

காரணம்..!

பெண்கள் ஆண்களை விட திடப்பிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணகள் இருக்கின்றனர். பெண்களின் DNA வில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்களின் DNA வில் ஒரு X குரோமோசோதான் இருக்கிறது.இந்த X குரோமோசோம்தான் நோய் எதிர்ப்பு சக்தி பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கிறது. எனவே இரண்டு X குரோமோசோம்களை கொண்ட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பிலேயே அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தில் 400ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – இன்று ஒரே நாளில் கிடுகிடு உயர்வு.

அதேபோல் பெண்களின் ஹார்மோன்களும் பெண்களுக்கு னாய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.பெண்களிடம் அதிக அளவில் காணப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் ஆண்களிடம் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!