தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!

0
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு - இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு - இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பாக இயங்கி வருகிறது, இந்த நிலையில் அரசு பள்ளிகளில் குறைவான சம்பளம் வாங்கி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று D.P. I வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஆசிரியர் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

போராட்டம் வாபஸ்:

தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. ஒரு நபரின் முக்கிய தகுதியாக இருப்பது கல்வி திறன் ஆகும், அதை அளிக்கும் ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ரூ.10,000 ஊதியத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நகைகள் திரும்ப ஒப்படைப்பு!

எனவே கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் D.P. I வளாகத்தில் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 1,000 த்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியது.

ஒரு வாரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – இன்று மீண்டும் திறப்பு! மார்ச் 4 வரை மக்கள் நடமாட தடை!

எனவே வரும் நிதிநிலை அறிக்கையில் பணி நிரந்தர அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது என கூறினார். இந்த நிலையில் பிரதிநிதிகள் தமிழக தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கோரிக்கை மனு பெறப்பட்டது மற்றும் அதிகாரிகள் பகுதிநேர ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார். இதன் காரணமாக D.P. I வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து ஆசிரியர் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!