விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா ஹேமா – ஆன்மீக சுற்றுலா!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா தற்போது சீரியலில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு திருப்பதி கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஹேமா
மக்கள் விரும்பும் குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இத்தொடர் ஒரு கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். அது போல இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சில சிறப்பான குணங்களுடன் மிக அழகான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.
டிச. 30 முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனா என்ற நகைச்சுவை கலந்த வில்லத்தனம் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இத்தொடரில் உருவாகும் சில, பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த மீனா கதாப்பாத்திரம் தான். என்றாலும் கடைசியில் இவரது கருத்துக்கள், சண்டைகள் எல்லாம் நகைச்சுவையாக மாறி விடுவது வழக்கம். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான ஹேமாவுக்கு இந்த மீனா கதாப்பாத்திரம் பெரிதளவு பேசப்படும் படிக்கு அமைந்திருக்கிறது. நடிகை ஹேமாவும் சீரியலை தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இப்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தனது குடும்பத்தாருடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ள ஹேமா, அதனை ஒரு வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எப்போதும் சீரியல், ஷூட்டிங் என்று பிசியாக இருந்து வரும் நடிகை ஹேமா தற்போது திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அந்த வகையில் திருப்பதி பயணம், பெருமாள் தரிசனம் போன்ற பல விஷயங்களை அந்த வீடியோ பதிவிவின் மூலம் அவர் வெளியிட இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.