‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா – புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா - புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா - புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா – புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது இந்த வார தொடக்கம் முதல் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ஆகிய இரண்டு தொடர்களும் ஒன்றாக இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இவர்களில் மூன்றாவதாக பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றாக இணைய இருக்கிறது.

மெகா சங்கமம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதையாக இல்லாமல் தமிழக குடும்பங்களுடன் ஒத்து போகின்றன கதைக்களமாக இருப்பதால் மக்களை அதை வெற்றி தொடராக மாற்றி இருக்கின்றனர். தொடர்ந்து மூன்று வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது ஒற்றுமையாக அண்ணன், தம்பிகளில் கண்ணன் கடைக்குட்டி வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கண்ணனை வீட்டை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.

ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதேபோல், விஜய் டிவியில் விகடன் குழுமத்தின் தயாரிப்பில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. டிஆர்பி ரேட்டிங்கில் சற்று பின்தங்கிய நிலையில் இருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடரை ரசிகர்களை கவனத்தை பெற வைப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் சேர்ந்து மெகா சங்கமமாக ஒரு மணி நேர எபிசோடாக கடந்த திங்கள் கிழமை முதல் ஒளிபரப்பி வருகின்றனர். இவர்களை எப்படி ஒன்று சேர்க்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவை வந்த நிலையில், மிகவும் எளிமையான காரணத்தையே சாக்காக பயன்படுத்தியுள்ளனர்.

அதாவது சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வந்த வேன் ரிப்பேர் ஆகி நின்று விட, அந்த வண்டி தமிழின் வீட்டு வாசலில் சரியாக நிற்கிறது. அப்போது தமிழை பின்னல் இருந்து கத்தியால் குத்த வந்த ஒருவரிடம் இருந்து மூர்த்தி குடும்பத்தினர் காப்பாற்றுகின்றனர். இந்த சூழ்நிலையில், இவர்கள் வந்த வான் டிரைவர் வண்டியோடு ஓடி விடுகிறார். தமிழின் உயிரை காப்பாற்றியவர் என்பதால் கோதை அவர்களுக்கு நன்றியை கூறி வீட்டில் தங்க வேண்டும் என்று கெடுக்க கொள்கிறார்.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சித்து, ஸ்ரேயாவிற்கு நாளை திருமணம் – வெளியான மெகந்தி நிகழ்ச்சி வீடியோ!

இந்த சங்கமம் இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு தற்போது மேலும் ஒரு டிரீட் கிடைக்க இருக்கிறது. அதவாது பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் மெகா சங்கமத்தில் தற்போது மூன்றாவதாக ஒரு சீரியல் சேர இருக்கிறது. காவியா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனம் மற்றும் பாக்கியலட்சுமி சுசித்ரா இருவருடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் சேர இருக்கிறது என்பது தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!