அமெரிக்காவின் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ் – 1.25 மணிநேரம் பதவி வகிப்பு!

0
அமெரிக்காவின் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ் - 1.25 மணிநேரம் பதவி வகிப்பு!
அமெரிக்காவின் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ் - 1.25 மணிநேரம் பதவி வகிப்பு!
அமெரிக்காவின் முதல் பெண் அதிபரான கமலா ஹாரிஸ் – 1.25 மணிநேரம் பதவி வகிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சைக்காக வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அதிபருக்கான அதிகாரம் தற்காலிகமாக வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர்:

அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (Joe Biden) பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் பதவி வகிக்கிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

தமிழக அரசின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

அப்போது அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரமானது கிட்டத்தட்ட 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிக அதிபர் பதவி வழங்குவது அமெரிக்காவை பொறுத்தவரை பலமுறை நடந்திருக்கிறது. அந்த வகையில் 1985ம் ஆண்டு அப்போதைய அதிபரான ரொனால்ட் ரீகன் மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது ஜார்ஜ் ஹெச்.டபில்யூ. புஷ் தற்காலிக அதிபராக இருந்துள்ளார்.

EPFO ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு – மத்திய அரசின் குழு ஆலோசனை!

அதேபோல் 2002 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் டிக் செனி என்பவர் தற்காலிக அதிபராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திர புரம் பகுதியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் அதிகாரம் பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜோ பைடன் அதிபர் பதவியை ஏற்றுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!