தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் – திருமண வீடியோ வைரல்!

0
தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் - திருமண வீடியோ வைரல்!
தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் - திருமண வீடியோ வைரல்!
தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் – திருமண வீடியோ வைரல்!

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் திருமணம் நவம்பர் 15ம் தேதியான இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. திருமண வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சின்னத்திரை ஜோடி:

வெள்ளித்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளை போல், சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் பலர் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தொழிலும் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகின்றனர். உதாரணமாக செந்தில் ஸ்ரீஜா, சஞ்சீவ் ஆல்யா போன்றவர்கள் உள்ளனர். இந்த வரிசையில் சமீபத்தில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட செம்பருத்தி ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் இணைந்துள்ளனர்.

நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் – திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!

இவர்களை போல் தற்போது ஜீ தமிழ் பிரபலங்களான ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் காதலித்து வந்தனர். பல மாதங்களாக வெளியில் அறிவிக்காமல் மௌனமாக இருந்து வந்தனர். சமீபத்தில் தான் இவர்களது காதல் விவகாரத்தை சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தனர். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று ரேஷ்மா மற்றும் மதன் இவர்களின் திருமண மெஹந்தி விழா வெகு விமரிசையாக நடந்தது.

‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

அதன் பிறகு நேற்று மாலை நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த விழாக்களில் அனைத்தும் இவர்கள் இருவரின் குடும்பத்தினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று காலை ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி நடந்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பரவி வருகிறது. அதில், மதன் தாலி கடும் போது ரேஷ்மா கண் கலங்குகிறார். அப்போது மதன் ரேஷ்மாவை சமாதானம் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த மக்கள் தங்களின் வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!