KL ராகுலை பார்த்து கடுப்பான கௌதம் கம்பீர் – IPL லீக் சுற்றில் தோல்வி! வைரலாகும் மீம்ஸ்!

0
KL ராகுலை பார்த்து கடுப்பான கௌதம் கம்பீர் - IPL லீக் சுற்றில் தோல்வி! வைரலாகும் மீம்ஸ்!
KL ராகுலை பார்த்து கடுப்பான கௌதம் கம்பீர் - IPL லீக் சுற்றில் தோல்வி! வைரலாகும் மீம்ஸ்!
KL ராகுலை பார்த்து கடுப்பான கௌதம் கம்பீர் – IPL லீக் சுற்றில் தோல்வி! வைரலாகும் மீம்ஸ்!

IPL 2022 போட்டியில் நேற்று (மே.26) நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் தோல்வியடைந்த பிற்பாடு LSG அணியின் கேப்டன் KL ராகுல் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கௌதம் கம்பீரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியேற்றுதல் சுற்று:

நடப்பு IPL சீசனில் ஆரம்பத்தில் இருந்து முதல் இடத்தை வகித்து வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேறுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தற்போது இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று (மே.25) நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து LSG அணி வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து டூ பிலிஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை சந்திக்க இருக்கிறது.

50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இப்போது நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக ஏற்பட்ட மழை காரணமாக IPL போட்டி ஒரு மணி நேரம் மற்றும் பத்து நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரஜித் படிதார் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார். தவிர தினேஷ் கார்த்திக் 37 ரன்களில் வானவேடிக்கைகளை வழங்க பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 207/4 என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த இமாலய இலக்கை சேஸ் செய்ய துவங்கிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் (58 பந்துகளில் 79) மற்றும் தீபக் ஹூடா (26 பந்துகளில் 45) ஆகியோரது ஆட்டம் அணியை கொஞ்சம் நிமிர்த்தியது. ஆனால் ஹேசில்வுட் மூன்று ஸ்டிரைக்குகள் மற்றும் ஹர்ஷல் படேல் தனது நான்கு ஓவர்களில் 1/25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால் லக்னோ அணியால் 20 ஓவர் முடிவில் 193/6 மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்த பிற்பாடு LSG அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மீது அந்த அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!