50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி - விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி - விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேற்படிப்பிறகாக வெளிநாடு செல்ல இருக்கும் மாணவர்களுக்காக சிறப்பான லோன் திட்டத்தை SBI வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மேற்படிப்பு மேற்கொள்ள விரும்பினால் அவர்களுக்கும் 50லட்சம் வரைக்கும் கூட லோன் வழங்கப்படுகிறது.

SBI வங்கி:

பள்ளி படிப்பை முடித்ததும் மேற்படிப்பிருக்காக பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டிற்கு உயர் படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கு அனைத்து வங்கிகளும் சிறந்த லோன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்காக செல்ல இருக்கும் மாணவர்களுக்காக சிறந்த லோன் சேவையை SBI வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த லோன் சேவையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். அதாவது, குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வட்டியில் சில சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்!

ரூ.7.5 லட்சம் வரைக்கும் கடன் வாங்குபவர்களுக்கு பிணைய பாதுகாப்பு தேவையில்லை மற்றும் ரூ.20 லட்சம் வரையிலும் கடன் வாங்குபவர்களுக்கு செயலாக்க கட்டணம் கிடையாது. மேலும், ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்கு மார்ஜின் கிடையாது. மேற்படிப்பை முடித்து ஒரு ஆண்டுக்கு பிறகே கடனை திருப்பி செலுத்தும் காலம் துவங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிப்பை முடித்துவிட்டு 15 ஆண்டு வரைக்கும் கடனை அடைக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. மாணவர் இந்தியாவில் படிக்க ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.1.50 கோடி வரையிலும் லோன் கொடுக்கப்படுகிறது. 8.65% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு இந்த வட்டியில் 0.50% வரைக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ரூ.20 லட்சம் வரைக்கும் கடன் வாங்கினால் ப்ராசஸிங் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் கடன் வாங்கும் பட்சத்தில் ப்ராசஸிங் கட்டணம் ரூ.10,000 வசூலிக்கப்படும். மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி, செவிலியர், சிவில் விமானப் போக்குவரத்து, இயக்குநர் ஜெனரல், விமானப் போக்குவரத்து, விமானப் பயிற்சி, கப்பல் போக்குவரத்து போன்ற படிப்புகளுக்கு லோன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ் போன்ற படிப்புகள் கற்க விரும்பினாலும் லோன் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!