உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!

0
உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!
உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!
உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!

நாட்டில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தகுதியற்றவர்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற்று கள்ள சந்தைகளில் விற்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவது குறைந்துள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதனால் தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து உங்களின் ரேஷன் கார்டு எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டால் மீண்டும் அதனை எப்படி பெறுவது என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு தீர்வு காணும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் உங்களின் ரேஷன் கார்டை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டு மீண்டும் பெறுவதற்காக வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன் பின் உங்களின் பயனாளர் ID-ஐ பதிவு செய்ய வேண்டும்.

3. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை பதிவு செய்தவுடன் சுயவிவர பக்கம் தோன்றும்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அமைச்சர் விளக்கம்!

4. அதன் பிறகு TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கப்படும்.

5. இதனை தொடர்ந்து இதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும். அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்த பிறகு டவுன்லோடு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

6. இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

7. இறுதியாக உங்களின் விவரங்கள் அதிகாரிகளால் சரி செய்யப்பட்டு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!