ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதோ ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள்!

0
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதோ ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள்!
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதோ ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள்!
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதோ ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் குடும்ப அட்டையை தொலைத்து விட்டால் அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் பெறுவது என்பது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

குடும்ப அட்டை:

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட திட்டம் ரேஷன் கடை திட்டம். அதாவது ஏழை, எளிய மக்களுக்கு சரியான வழியில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதே போல் மத்திய அரசும் ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ரேஷன் அட்டைகள் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.

அத்தகைய ரேஷன் அட்டைகள் மூலம் பல மோசடிகளும் நாட்டில் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக தான் மத்திய அரசு ஆதாருடன் ரேஷன் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் ரேஷன் கடைகள் மூலம் நடைபெறும் ஊழல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாட்டில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் திட்டம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். ஆனால் தகுதி இல்லாதவர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்துவதால் தகுதியானவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன. இதன் காரணமாக தகுதி இல்லாதவர்களின் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு வருகின்றன.

TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Result எப்போது?

மேலும் ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய நகலை பெறுவது என்பது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.

2. பிறகு உங்களது பயனாளர் ID யை பதிவிட வேண்டும்.

3. பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

4. இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.

5. மேலும் அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து டவுன்லோட் செய்ய வேண்டும்.

6. இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!