தேர்தல் வேட்பாளர்களுக்கு ரூ.95 லட்சம் வரை லிமிட் – தேர்தல் ஆணையம் அதிரடி!

0
தேர்தல் வேட்பாளர்களுக்கு ரூ.95 லட்சம் வரை லிமிட் - தேர்தல் ஆணையம் அதிரடி!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல்:

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் உட்பட 22 மாநிலங்களுக்கு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

SBI Clerk 2024 முதன்மை தேர்வு முடிவு – விரைவில் வெளியீடு!

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் ரூபாய் 750 கோடி தொகை கேட்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றும், சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் ரூபாய் 40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!