அனைத்து காவல் துறையினருக்கான விடுமுறை ரத்து – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

0
அனைத்து காவல் துறையினருக்கான விடுமுறை ரத்து - நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!
அனைத்து காவல் துறையினருக்கான விடுமுறை ரத்து - நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!
அனைத்து காவல் துறையினருக்கான விடுமுறை ரத்து – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அனைத்து காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் போராட்டம்:

கொரோனா வருகைக்கு பின்னர், இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் செய்தது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!

இதன் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருவதால், இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவுக்கு இந்த இருவர் தான் காரணம் என்பதே மக்களின் குற்றச்சாட்டு ஆகும். இலங்கையில் போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

Exams Daily Mobile App Download

கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆளும் கட்சியின் எம்.பி ஒருவர் உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால், 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!