சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே-ஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு வாய்ப்பு!

ஐபிஎல் 2022 போட்டிகளில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ப்ளே-ஆஃப்ஸ் தகுதி பெற ஒரு சில வாய்ப்புகளுடன், மற்ற அணிகளின் தோல்வியும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் சீசனில், நடப்பு சாம்பியன்கள் பிளே-ஆப்களுக்குள் நுழைவதை உறுதிசெய்ய மீதமுள்ள 3 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த நேரத்தில் இது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. இருந்தாலும் CSK அணி இன்னும் பிளே-ஆஃப் பந்தயத்திலிருந்து முழுமையாக வெளியேறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சீஸனின் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை தழுவி இருந்த CSK அணி இதுவரை 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு குறித்து விளக்கம்!

கடந்த காலங்களில் 4 ஐபிஎல் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இப்போது ஒரு சரியான நிலைத்தன்மை இல்லை. CSK தற்போது 4வது இடத்தில் உள்ள RCB அணியை விட 8 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. ஆனால் CSK இன்னும் பிளே-ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறவில்லை. அதாவது மே 10 நிலவரப்படி, சீசனின் 56வது ஆட்டத்திற்குப் பிறகு, 10 அணிகளில் 9 அணிகள் முதல் 4 இடங்களைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. இப்போது வரை 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மட்டுமே பிளே-ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறியது.

இந்த அணிக்கு பிறகு பிளே-ஆப் வாய்ப்பை இழக்கும் இடத்தில் CSK இருக்கிறது. இருந்தாலும் CSK இப்போது பிளே-ஆப் இடத்திற்கு போட்டி மூலம் நேரடியாக செல்ல முடியாது. அவர்களின் தலைவிதி இனி அவர்கள் கையில் இல்லை. அதாவது, CSK தனது கடைசி 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று இந்த வாய்ப்புகளில் நிலைக்க வைக்க வேண்டும். இப்போது CSK அணியின் பிளே-ஆஃப் தகுதி வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, தோனியோ அல்லது சக வீரர்களோ அதில் கவனம் செலுத்தவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்து களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து தோனி கூறுகையில், ‘மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ரசியுங்கள். நாங்கள் அழுத்தத்தை விரும்பவில்லை. மற்ற இரண்டு உரிமையாளர்கள் விளையாடும் போது, நீங்கள் அழுத்தத்தில் இருக்க வேண்டாம். எனவே ஐபிஎல் போட்டிகளை அனுபவிக்கவும். அது நடந்தால், கண்டிப்பாக அது நடக்கும். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்வதே மிக முக்கியமானது’ என்று கூறியுள்ளார். இப்போது புள்ளிப்பட்டியலில் CSK அணிக்கு முன்னாள் இருக்கும் மற்ற அணிகள் அடுத்தடுத்த ஆட்டங்களில் தோற்றால் மட்டுமே இந்த அணி பிளே-ஆப்களுக்கு தகுதி பெறும்.

Exams Daily Mobile App Download

இந்த கட்டம் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், CSK அணி பிளே-ஆஃப்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில் CSK ஐபிஎல் 2022 பிளே-ஆஃப்களுக்கு தகுதி பெற, அவர்கள் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று சுமார் 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, CSKன் நிகர ஓட்ட விகிதம் ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்று +0.028 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

CSKன் மீதமுள்ள போட்டிகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!