ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணம்மாவின் கணவர் பாரதி – ரசிகர்கள் ஷாக்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணம்மாவின் கணவர் பாரதி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணம்மாவின் கணவர் பாரதி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணம்மாவின் கணவர் பாரதி – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை சந்தேகப் படும் கணவனாக பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் குறித்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பாரதி – அருண் பிரசாத் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா தொடரும் டாப் லிஸ்டில் உள்ளது. அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியலும் இது தான்! அதிக விமர்சனங்களை பெற்ற சீரியல் என்றாலும் அது பாரதி கண்ணம்மா தொடர் தான். ஏனென்றால் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த கதையும் முடிந்து விடும், ஆனால் ஒரே கதையை ஆயிரம் விதமாக சுத்தி சுத்தி எடுத்து மக்களை போர் செய்ய தொடங்கி விட்டது.

பிறந்த முதல்நாளே பென்ஸ் காரில் சென்ற அர்ஷ் – ஆலியா மற்றும் சஞ்சீவ்வின் லேட்டஸ்ட் வீடியோ!

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக எதோ ஓரளவு விறு விறுப்புகளுடன் லட்சுமி அப்பாவை கண்டுபிடித்த காட்சிகளும், பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க நிலைக்கு லட்சுமி, ஹேமா செய்யும் வேலைகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பரப்பையும், ஆவலையும் தூண்டி வருகிறது. இதில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் முதன் முதலில் அறிமுகமாகிய சின்னத்திரை என்றால் அது விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடர் தான். இவர் சீரியலுக்கு வருவதற்க்கு முன்பு சில குறும்படங்களிலும் நடித்திருந்தார். இவ்வாறு குறும்படங்களில் நடித்தது மூலமாக தான் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையின் முன்னணி நாயகனான அருண்பிரசாத்திற்கு இந்த சீரியல் மூலமாக பிரபலமடைந்து பல ரசிகர்களை ஈர்த்தவர். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் அருண்பிரசாத், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஆக உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!