கர்ப்பமாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!

0
கர்ப்பமாக இருக்கும் 'பாரதி கண்ணம்மா' பரினாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் - வைரலாக்கும் ரசிகர்கள்!
கர்ப்பமாக இருக்கும் 'பாரதி கண்ணம்மா' பரினாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் - வைரலாக்கும் ரசிகர்கள்!
கர்ப்பமாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகை பரினா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில படப்பிடிப்பு புகைப்படங்களை பதிவிட ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை பரினா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பல்வேறு திருப்பங்கள் நிறைந்ததாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை மறைக்கப்பட்டு வந்த உண்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த கதைக்களத்தில் இன்னும் DNA டெஸ்ட் எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. அப்படி DNA டெஸ்டும் எடுக்கப்பட்டால் சீரியல் முடிவுக்கு வந்து விடும் என்று கூறப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மாவில் இருந்து விடைபெறுகிறாரா வெண்பா பரினா? அவரே சொன்ன விளக்கம்!

இதனுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதற்கு மத்தியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இந்த அளவு ரீச்சுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நடிகர், நடிகைகளின் தேர்ந்த நடிப்பு தான். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பா கதாப்பாத்திரம் தான் இந்த சீரியலின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் ‘பாக்கியலட்சுமி’ ராதிகா? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த ரசிகர்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் சந்தித்து வரும் நடிகை பரினா, வழக்கம் போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதனை வைரலாக்குவதோடு நில்லாமல் கர்ப்பமாக இருக்கும் நடிகை பரினாவுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!