‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் ‘பாக்கியலட்சுமி’ ராதிகா? ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதில் 'பாக்கியலட்சுமி' ராதிகா? ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதில் 'பாக்கியலட்சுமி' ராதிகா? ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் ‘பாக்கியலட்சுமி’ ராதிகா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி சீரியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் மற்றொரு நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

தமிழ் தொலைக்காட்சிகள் பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த முன்னணி சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. பிறக்கும் போதே அம்மாவை இழந்த பெண் சித்தி கொடுமையில் இருக்க, கருப்பாக இருப்பதால் பல இடங்களில் நிராகரிக்கப்படுகிறார். அவரை துரத்தி துரத்தி டாக்டர் பாரதி காதலிக்க அம்மாவை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார். கருப்பு நிறம் மற்றும் படிப்பை காரணம் காட்டி மாமியார் சௌந்தர்யா அவளை கொடுமைப்படுத்த பாசமான கணவர் மட்டும் போதும் என சந்தோசமாக இருக்கிறார்.

விஜே முதல் சின்னத்திரை வரை – ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர் அக்னி கடந்து வந்த பாதை!

நடுவில் வந்த வில்லி வெண்பா சதியால் சந்தேகம் என்ற வலையில் சிக்கிய டாக்டர் பாரதி, கண்ணம்மாவை சந்தேகப்பட கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்ப அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு குழந்தையை பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறார் சௌந்தர்யா. பின் 8 வருடங்களுக்கு பின் தனது கணவர் குடும்பத்தை சந்தித்த கண்ணம்மா, தனது மகள் பாரதியுடன் நெருக்கமானதை பார்த்து சந்தோசப்படுகிறார். கண்ணம்மாவின் மகள் தான் லட்சுமி என்ற உண்மையை மறைக்க அதை கண்டுபிடித்து கோபப்படுகிறார் பாரதி.

பின் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்த உண்மையை சொன்ன மருத்துவர் தனது குழந்தையை தேடி கண்ணம்மா அலைய அதை சாதகமாக பயன்படுத்தி வெண்பா பாரதி கண்ணம்மாவை பிரிக்க நினைக்கிறார். அப்போது ஹேமா தான் உன்னுடைய குழந்தை என சௌந்தர்யா சொல்ல, பாரதி என்ன சொல்ல போகிறான் என குழப்பத்தில் சௌந்தர்யா இருக்கிறார். இப்படி பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இன்னும் 10 நாள் எபிசோடில் மட்டுமே அவர் வருவார்.

‘கண்ணம்மா’ ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!

இதனால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்ற மற்ற நடிகை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் மாற்றப்பட்ட போது அதில் ரேஷ்மா நடித்தார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!