விஜே முதல் சின்னத்திரை வரை – ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர் அக்னி கடந்து வந்த பாதை!

0
விஜே முதல் சின்னத்திரை வரை - 'செம்பருத்தி' சீரியல் நடிகர் அக்னி கடந்து வந்த பாதை!
விஜே முதல் சின்னத்திரை வரை - 'செம்பருத்தி' சீரியல் நடிகர் அக்னி கடந்து வந்த பாதை!
விஜே முதல் சின்னத்திரை வரை – ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர் அக்னி கடந்து வந்த பாதை!

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியலான் ‘செம்பருத்தி’ இல் புதிய ஆதியாக நடித்து வரும் விஜே அக்னி, சின்னத்திரைக்கு வருவதற்கு முன் அவர் கடந்து வந்த பாதை குறித்து இப்பதிவில் காணலாம்.

விஜே அக்னி

வழக்கமாக அனைத்து சீரியல்களும் ஒன் லைன் கதைக்களத்துடன் ஆரம்பித்து அப்படியே மாத கணக்கில் வருட கணக்கில் ஒளிபரப்பாகும். இப்படி வருட கணக்கில் ஒளிபரப்பாகி வரும் கதையை தீர்மானிப்பது அதன் ரசிகர்கள் தான். ஏனென்றால் சரியான கதையம்சம் இல்லாத சில சீரியல்களில் நடிக்கக்கூடிய அதன் நடிகர், நடிகைகளுக்காகவே பலரும் அந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பது உண்டு. இப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்கள் மட்டும் தான் வருடங்கள் கடந்து ஒளிபரப்பாகும்.

‘கண்ணம்மா’ ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!

அந்த வகையில் ஒரு கால கட்டத்தில் TRP ரேட்டிங் கிங்காக இருந்து சமீபகாலமாக பெருமளவு சறுக்கல்களை சந்தித்து வருகிற சீரியல் என்றால் அது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘செம்பருத்தி’ தொடர் தான். இந்த சீரியலின் ஆரம்ப கட்டங்களில் ஆதியாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ஷபானா சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதன் மூலம் TRP ரேட்டிங்கில் எப்போதும் முதன்மை இடத்தையும் இந்த ‘செம்பருத்தி’ சீரியல் வகித்து வந்தது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் ராஜ் விலகியதும் அதன் TRP அடிபட துவங்கியது. இதற்கு காரணம் அந்த சீரியலின் புதிய ஆதியாக களமிறங்கிய விஜே அக்னி என பரவலான கருத்துக்கள் எழுந்தது. இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய விஜே அக்னி தற்போது ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதி கதாப்பாத்திரத்துக்கு ஒரு நன்மதிப்பை பெற்று தந்திருக்கிறார்.

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல யூடியூப் சேனலில் விஜேவாக பணியாற்றி வந்த அக்னி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்பட நடிகர், நடிகைகளை பேட்டி கண்டிருக்கிறார். குறிப்பாக பிரபாஸ், அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜான்வி கபூர் என பல பிரபலங்களிடம் இவை எடுத்திருந்த பேட்டி அதிகப்பட்ச பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. தற்போது ‘செம்பருத்தி’ சீரியலில் நடித்து வரும் விஜே அக்னி ரசிகர்கள் எதிர்பார்த்த ஆதியாக உருவெடுத்து வருவது சீரியல் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here