‘கண்ணம்மா’ ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!

0
'கண்ணம்மா' ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ - குவியும் லைக்குகள்!
'கண்ணம்மா' ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ - குவியும் லைக்குகள்!
‘கண்ணம்மா’ ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி மற்றும் அவரது மகளாக ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிஷா இருவரும் இணைந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். 8 வருடங்களுக்கு பின் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. அதில் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் ஆகவில்லை மற்றும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது உள்ளிட்ட பல உண்மைகள் வெளியாகி உள்ளது. மேலும் கண்ணம்மாவின் இன்னொரு குழந்தை ஹேமா தான் என சௌந்தர்யா சொல்லி இருக்கிறார்.

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் தன்னுடைய குழந்தை தனக்கு வேண்டும் என கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சண்டை போடுகிறார். ஆனால் பாரதி ஹேமாவை பிரிந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்ல சௌந்தர்யா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த சூழலில் அஞ்சலி ஹேமாவை அழைத்து கொண்டு கண்ணம்மா வீட்டில் தங்க அதை பாரதி கண்டுபிடித்து ஹேமாவை அழைத்து செல்கிறார். இந்த விஷயம் தெரிந்த கண்ணம்மா ஹேமாவை எப்படி அவர் கூட்டிக்கொண்டு போகலாம் அவள் என்னுடைய குழந்தை என நினைக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி – ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்து ஹேமாவை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என சொல்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரோஷினி உடன் இணைந்து அவளது மகளாக நடிக்கும் லிஷா இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிஸ் யூ ரோஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here