விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஹீரோ திடீர் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காற்றுக்கென்ன வேலி:

தமிழில் மற்ற டிவி சீரியல்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்படும் சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, மௌன ராகம் போன்ற சீரியல்கள் நல்ல டிஆர்பி ரேடிங்கில் உள்ளது. இப்படி மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று தான் ‘காற்றுக்கென்ன வேலி’ கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் கதாநாயகி வெண்ணிலா ஐஏஎஸ் படித்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்று நோக்கில் இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி – ரசிகர்கள் ஷாக்!

இந்த நேரத்தில் அவள் அப்பா அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் வெண்ணிலா வீட்டில் இருந்து வெளியேறி ஐஏஎஸ் படிக்க முயற்சித்து வருகிறார். இந்த நேரத்தில் அவள் பயின்ற கல்லூரியில் பேராசிரியர் உதவியுடன் ஒரு கல்லூரியில் சேருகிறார். கல்லூரி உரிமையாளர் தான் சீரியலின் ஹீரோ சூர்யா தர்ஷன். கல்லூரியில் பேராசிரியரும், கல்லூரியின் உரிமையாளருமான ஹீரோ சூர்யா தர்சனுக்கும் வெண்ணிலாவுக்கு இடையே காதல் வளர்கிறது. அதே கல்லூரியில் பயிலும் சூர்யாவின் தங்கைகளுக்கு வெண்ணிலவை சுத்தமாகவே பிடிக்கவில்லை. அவரை கல்லூரியில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

தாமரையின் நாணயத்தை எடுத்த ஸுருதி, கண்ணீரில் அழுது புலம்பும் தாமரை – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ!

இதனால் வெண்ணிலாவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்படும் இந்த சீரியல் ஹீரோ சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘காற்றுக்கென்ன வேலியில் ஹீரோவாக சூர்யா தர்சனுக்கு பதில் சுவாமிநாதன் அனந்தராமன் நடிக்க உள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாமிநாதன் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here