‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி – ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி - ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி - ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து 10 நாட்களில் விலகும் ரோஷினி – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் பழைய கண்ணம்மா கதாபாத்திரம் வரும் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. குறிப்பாக TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் புகழின் உச்சியில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினியை ரசிகர்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வருகிறார்கள்.

தாமரையின் நாணயத்தை எடுத்த ஸுருதி, கண்ணீரில் அழுது புலம்பும் தாமரை – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ!

இந்நிலையில் டாப் சீரியலாக இருக்கும், பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது குறித்து உறுதியான தகவல் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தனது கடைசி காட்சிகளை ரோஷினி நடித்து கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்னும் 10 நாட்களுக்கு மட்டும் பழைய கண்ணம்மா தொடருவார் எனவும், அதுக்கு அப்பறம் வேறு ஒரு நடிகை கண்ணம்மாவாக தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!

கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேறு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என சீரியல் குழுவினர் தேடி வருவதாகவும், கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டதும் TRPயில் பெரிய தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கண்ணம்மா ரசிகர்கள் இன்னும் 10 நாட்கள் மட்டுமே கண்ணம்மாவை (ரோஷினியை) சீரியல் பார்க்க முடியும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கிறார்கள். மேலும் புதிய கண்ணம்மாவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here