ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் முன்பை விட இப்போது ஒரு மாதத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் சேவை:

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரயில் பயணத்தை விரும்புவர். மக்கள் வசதிகளுக்கு ஏற்ப பல வசதிகளை இந்திய ரயில்வே செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை 2 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன.

டிகிரி முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு – 1544 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இந்த விதிகளின் கீழ் உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி உடன் இணைத்திருந்தால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு நபர் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசியுடன் இணைக்காமல் இருந்தால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

ஆனால், ஐஆர்சிடிசி ஐடியை ஆதார் அட்டையுடன் இணைத்திருந்தால், ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஐஆர்சிடிசி இந்த விதியில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நீங்கள் ஒரு ஐஆர்சிடிசி ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசிஉடன் இணைக்காவிட்டாலும், ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!