டிகிரி முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு – 1544 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
டிகிரி முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - 1544 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
டிகிரி முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - 1544 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
டிகிரி முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு – 1544 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஐடிபிஐ வங்கியில் அதிகாரி பணியிடங்கள், துணை மேலாளர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இதில் அதிகாரி பணியிடத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 1.4.2022 அன்று நிலவரப்படி குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருக்க வேண்டும். அத்துடன் துணை மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 28 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அதிகாரி பணியிடம் அல்லது துணை மேலாளர் பணியிடத்தில் ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை மீறி விண்ணப்பம் செய்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் அதிகாரி பணியிடத்தில் தகுதியான நபர்கள் நேரடி நியமன தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.  இதையடுத்து துணை மேலாளர் பணியிடத்தில் சேருவதற்கு மணிப்பால் குளோபல் கல்வி சேவை மற்றும் நிட்டே கல்வி சர்வதேச தனியார் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து வழங்கும் டிப்ளமோ கல்வியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.idbibank.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று வருகிற ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இது தொடர்பான தகவல்களை பெற நினைப்பவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here