பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் – ரூ. 500 செலுத்தி 2.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

0
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் - ரூ. 500 செலுத்தி 2.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்!
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் - ரூ. 500 செலுத்தி 2.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்!
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் – ரூ. 500 செலுத்தி 2.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

அஞ்சலகத்தில் உள்ள பல சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ. 500 செலுத்தினால் 2.5 லட்சம் வரை திரும்ப பெற முடியும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் வங்கி மற்றும் அஞ்சல் துறையானது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கானது. கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

இன்றைய நிலையில் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது. மற்ற அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தை காட்டிலும் இதில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது இதில் 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மேலும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்ச ரூ. 250 ரூபாயும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ.500 டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு வைப்புத் தொகை ரூ.6,000 முதலீடு செய்யலாம்.

SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!

Exams Daily Mobile App Download

ஒரு பெண் குழந்தைக்கு 1 வயது இருக்கும் போது இத்திட்டத்தில் சேர்ந்தால் அக்குழந்தைக்கு 21 வயது ஆகும் போது அதாவது 21 வருடங்களுக்கு பிறகு ரூ. 2,54,606 வரை திரும்ப பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த உடன் உயர் கல்விக்காக 50% பணத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும். மீத தொகையை திருமணத்தின் போது எடுத்து கொள்ளலாம். அத்துடன் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் செல்வமகள் திட்டத்தில் (சுகன்யா ஸ்மிருதி யோஜனா) வரி விலக்கு சலுகையும் உண்டு.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!