சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இருவழிப்பாதையை திறக்க முடிவு!

0
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - இருவழிப்பாதையை திறக்க முடிவு!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - இருவழிப்பாதையை திறக்க முடிவு!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இருவழிப்பாதையை திறக்க முடிவு!

கேரளாவில் உள்ள சபரிமலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் 5000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சபரிமலை பிரசாதமான அரவண பாயாசம், அப்பம் ஆகியவை நேற்று மட்டும் 5 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

சபரிமலை:

கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு சபரிமையில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள்!

அதனால் ஆன்லைன் முலம் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முதலில் 10 இடங்களில் ஸ்பாட் புக்கிங் முன்பதிவு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் பேட்ஜ்கள் வருகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

Airtel வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம்!

இந்த நிலையில் காலை கோவில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்தில் மட்டும் 5000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மாதத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கடந்த 6 நாட்களில் சபரிமலையில் அரவண பாயாசம், அப்பம் ஆகியவை மட்டுமே 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது என்று தேவசஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலையில் 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!