தமிழகத்தில் RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

0
தமிழகத்தில் RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தமிழகத்தில் RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தமிழகத்தில் RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆர்.ஆர்.பி. தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

சிறப்பு ரயில்:

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக போன வருடம் இதற்கான முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்வு நாளை ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

RRB தேர்வு எழுதுபவர்களுக்கு எந்தெந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

திருநெல்வேலி to பெங்களூர் மற்றும் பெங்களூரு to திருநெல்வேலி ரயில் சேவை:

திருநெல்வேலி முதல் பெங்களூர் செல்லும் ரயிலானது வருகிற 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கும், மாற்றுப்பாதையில் பெங்களூரு முதல் திருநெல்வேலி ரயில் வண்டியானது இடையே வருகிற 17 ம் தேதி பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கும் ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி to கர்னூல் மற்றும் கர்னூல் to தூத்துக்குடி ரயில் சேவை:

தூத்துக்குடி முதல் கர்னூல் செல்லும் ரயிலானது வருகிற 13-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் எனவும், மாற்றுப்பாதையில் கர்னூல் முதல் தூத்துக்குடி இடையே வருகிற 17 ம் தேதி கர்னூலில் இருந்து இரவு 7.30 மணிக்கு ஆர்.ஆர்.பி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

கொல்லம் to திருச்சி மற்றும் திருச்சி to கொல்லம் ரயில் சேவை:

கொல்லம் முதல் திருச்சி செல்லும் ரயிலானது வருகிற 13-ந் தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் எனவும், மாற்று பாதையில் திருச்சி முதல் கொல்லம் இடையே வருகிற 17 ம் தேதி திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு ஆர்.ஆர்.பி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருப்பதி to சேலம் மற்றும் சேலம் to திருப்பதி ரயில் சேவை:

திருப்பதி முதல் சேலம் செல்லும் சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ஜூன் 11ம் தேதி திருப்பதியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் எனவும், நாளை ஜூன் 12ம் தேதி இரவு 7.30 மணிக்கு, மாற்றுப்பாதையில் சேலம் முதல் திருப்பதி இடையே செல்லும் ரயில் இன்று சேலத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் எனவும், 13ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆர்.ஆர்.பி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!