வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – இப்படி EMI கட்டினால் பணம் மிச்சம்!

0
வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு - இப்படி EMI கட்டினால் பணம் மிச்சம்!
வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு - இப்படி EMI கட்டினால் பணம் மிச்சம்!
வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – இப்படி EMI கட்டினால் பணம் மிச்சம்!

வங்கிகளின் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும் வங்கிகள் கையில் எடுத்துள்ள மிக முக்கியமான திட்டம் தான் வீட்டுக் கடன். இந்நிலையில் கொரோனா காலம் முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் குறைவாக இருந்து வரும் நிலையில், விரைவில் விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இருப்பு பரிமாற்றம் மூலம் EMI கட்டினால், பணம் மிச்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வட்டி விகிதம் குறித்த முக்கிய தகவல்:

பொதுவாக சாமானிய மக்களுக்கு கடன் வேண்டும் என்றால், நாம் வங்கியில் சென்று கடன் பெற முடியும். அதற்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சதவிதம் அளவிற்கு வட்டியை நிர்ணயம் செய்யும். அதே போல், வங்கிக்கும் அவர்களுடைய செயல்பாட்டிற்கு கடன் தேவைப்படலாம், அதற்கு, நாம் வங்கிகளிடம் கடன் வாங்குவதை போல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும். அவ்வாறு வங்கிகள் வாங்கும் கடனுக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யும் வட்டியின் பெயர் தான் ரெபோ வட்டி விகிதம். அதே போல், வங்கியிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி பெற்று கொண்டு அதற்கு ஒரு குறிப்பிட்ட சதவிதம் வட்டி கொடுத்தால் அதற்கு பெயர் reverse repo வட்டி விகிதம் ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி (HRA) உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட உதவுவது வீட்டு கடன் தான். இதன் மூலம் பலர் வீட்டு கட்ட கடன்களை பெற்று வருகின்றனர். இருப்பினும் கொரோனா காலத்திலிருந்து வீட்டுக் கடன் விகிதங்கள் வரலாறு காணாத வகையில் குறைந்த அளவில் இருந்து வருகின்றன. இதனால் விரைவில், வீட்டுக் கடன் EMI களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2020 முதல் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக நிலையாக வைத்துள்ளது. இதுவரை ஒரு முறை கூட இது உயர்த்தப்படவில்லை. தேவையான தகுதிகள் இருந்தால், 6.40 சதவீத விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடிவதற்கு இதுவே காரணம். ஏராளமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 7 சதவீதத்துக்கும் குறைவான விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணம்:

1. நபர் ஒருவர் 6.50% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், இந்தக் கடனின் ஒவ்வொரு ரூ.1 லட்ச அசல் தொகைக்கும் சுமார் ரூ.79,000 வட்டி செலுத்துவார்.

2. வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 0.25% முதல் 6.75% வரை அதிகரித்தால், அந்த நபரின் வட்டி சுமார் ரூ.82,000 ஆக உயரும். விகிதம் 7% ஆக இருந்தால், வட்டி ரூ 86,000 ஆக இருக்கும். அதாவது, வட்டி விகிதத்தில் சிறிய அதிகரிப்பு கூட வட்டியில் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

3. கடன் விகிதத்திற்கும் சந்தை விகிதத்திற்கும் இடையே பெரிய (0.25-0.50%) வித்தியாசம் இருக்கும் போது வீட்டுக் கடன் மறுநிதியளிப்பு அதாவது இருப்புப் பரிமாற்ற (பாலன்ஸ் டிரான்ஸ்ஃபர்) விருப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

4. விகிதம் 7.50% ஆக இருந்து சந்தையில் 7%-ல் கடன் கிடைக்கிறது, அத்தகைய சூழ்நிலையில், இருப்பு பரிமாற்றம் பயனுள்ளதாக இருக்கும்.

5. கடனுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருந்தால், ஒவ்வொரு ரூ.1 லட்சம் கடனுக்கும் சுமார் ரூ.7,400 சேமிக்கலாம். ஆனால் பாதிக்கு மேல் கடன் கால அவகாசம் இருந்தால் மட்டுமே இருப்பு பரிமாற்றம் சரியான முடிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!