EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!

0
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!

இந்தியாவில் EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி தேதி ஆகியும் பென்சன் தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்த நிலையில், இனி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் கிடைக்கும் என்று EPFO தெரிவித்துள்ளது.

EPFO:

இந்தியாவில் மத்திய மாநில அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை அவர்களின் பணி காலம் முடிவடைந்த பிறகு மொத்தமாக வழங்கப்படும். அதனை தொடர்ந்து ஓய்வு காலத்தில் உதவும் வகையில் மாதந்தோறும் ஓய்வூதியத்தொகை வழங்கப்படும். ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள். பணியாளருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும்.

IPL 2022: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜேசன் ஹோல்டர்? ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!

தற்போது மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு அளித்து ஓய்வூதியத்தொகையையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதி ஆகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளுக்குள் பென்சன் வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மதுரையில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதில் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் போய் சேர வேண்டியதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பென்சன் விநியோகிக்கும் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் கிடைக்கும் என்று EPFO தெரிவித்துள்ளது. பென்சன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் படி இழப்பீட்டுத் தொகை ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று EPFO வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!